பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பாகுபலி வில்லன் ராணா டகுபதி தற்போது நடித்து வரும் படம் விரட்ட பர்வம். வேணு உதுகலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராணாவின் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை. எனவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
விரட்ட பர்வம் படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது. இது ஒரு ஆக்ஷன் கலந்த காதல் படமாம். கதைப்படி ராணா ஒரு நக்சலைட். படத்தில் ராணா மீது பைத்தியம் போல் காதல் கொள்கிறார் சாய் பல்லவி. ஆனால் ராணாவோ, சாய் பல்லவியின் காதலை ஏற்க மறுத்து, தனது லட்சியங்களை நோக்கி பயணப்படுகிறாராம். ஒருக்கட்டத்தில் ராணாவுக்காக சாய் பல்லவியும் நக்சலைட்டாக மாறுவது போன்று கதை என இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.