Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாகித் வாயைக் கிழித்த கிரிக்கெட் பந்து

12 ஜன, 2020 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Shahid-Kapoor-gets-injured-on-the-sets-of-Jersey

அர்ஜுனன் என்ற கிரிக்கெட் வீரர், மிகத் திறமையானவர்; ஆனால், கிரிக்கெட்டில் தோல்வி அடைந்தவர். அவர், தன்னுடைய மகனின் விருப்பத்துக்காக, தன்னுடைய முப்பது வயதைக் கடந்த நிலையிலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடிவெடுத்து, அணியில் இடம் பெறுவதற்காக போராடுவார். இப்படிப்பட்ட ஒரு கதைதான் ஜெர்சி. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு, மிகப் பிரமாதமாக ஓடியது.


இதையடுத்து, அந்தப் படத்தை, அதே பெயரிலேயே இந்தியில் மொழியாக்கம் செய்து வருகின்றனர். தெலுங்கில் படத்தை இயக்கிய கவுதம் தின்னூரியே, இந்தி பதிப்பையும் இயக்குகிறார். இந்தி பதிப்பை அல்லு அரவிந்த், அமன் கில், தில் ராஜு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


இந்த படத்தில், கிரிக்கெட் வீரராக, நடிகர் ஷாகித் கபூர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன், ஷாகித் கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை நோக்கி வந்த பந்தை கவனிக்கத் தவறி, ஷாகித் கபூர் வேறு எங்கோ மட்டையைச் சுழற்ற, வேகமாக வந்த பந்து, ஷாகித் கபூரின் வாயைத் தாக்கியது. பந்து வேகமாக தாக்கியதில், உதடு கிழிந்து தொங்கியது.


இதையடுத்து, ஷாகித் கபூர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு உதடு மற்றும் வாய் பகுதியில் தையல் போடப்பட்டது. அவர் தொடர்ச்சியாக ஓய்வில் இருந்து, காயத்தை ஆற்ற வேண்டும் என, மருத்துவர்கள் அட்வைஸ் செய்திருக்கின்றனர். ஆனால், ஷாகித் கபூரோ, விரைவில் சூட்டிங்கை துவங்குங்க; நான் நடிக்கிறேன் என, தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறார்.


பத்து நாட்கள் கழித்து சூட்டிங்கை ஆரம்பித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டது படக் குழு.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகைக்கு அத்துமீறி முத்தம் கொடுத்த ரசிகர்நடிகைக்கு அத்துமீறி முத்தம் கொடுத்த ... வந்தது புது சொகுசு கார்; 2020 துவக்கமே நிதி அகர்வாலுக்கு இன் முகம் வந்தது புது சொகுசு கார்; 2020 துவக்கமே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in