175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சால்ட் அண்ட் பெப்பர், இடுக்கி கோல்ட், இயோபின்றே புஸ்தகம், அஞ்சு சுந்தரிகள், மகேஷின்றே பிரதிகாரம், தொண்டிமுதலும் திருக்சாட்சியும், மாயநதி போன்ற மலையாள வெற்றி படங்களின் கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன். இவர் இயக்குநர் திலேஷ் போத்தன், நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து, முதல் முறையாக தன் சொந்த தயாரிப்பில் உருவாக்கிய திரைப்படம் கும்பளங்கி நைட்ஸ். இந்தப் படத்தை மது.சி.நாராயணன் இயக்கி இருந்தார்.
ஷான் நிகம், பகத் பாசில், சவுபின் சாஹிர், சுசீலா மற்றும் பலர் நடித்திருந்த படம் கும்பளங்கி நைட்ஸ். சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தத படம், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதிலும் பாராட்டைப் பெற்றிருந்தது. விருதுகளையும் பெற்றிருந்தது.
இந்தப் படத்துக்கான தமிழ் உரிமையை ஈகிள் ஐ தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.
அந்நிறுவனம், தமிழில் கும்பளங்கி நைட்ஸ் படத்தை மறு மொழியாக்கம் செய்து வெளியிட இருக்கிறது. தமிழில் எடுக்கப்படும் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் நடிகர் கதிர், கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.