Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர்: சர்ச்சையை கிளப்பும் ‛தாராள பிரபு'

10 ஜன, 2020 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Dharala-Prabhu-poster-creates-contraversy

ஆயுஸ்மான் குரானா, யாமி கவுதம் நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ‛விக்கி டோனர்'. விந்து தானத்தை மையப்படுத்திய இப்படம் அங்கு வரவேற்பை பெற்றது. இதை தமிழில் ‛தாராள பிரபு' என்ற பெயரில் ரீ-மேக் செய்கின்றனர். ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, தன்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். கிருஷ்ண மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் போஸ்டரே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தாமரை மலரில் ஹரிஸ் கல்யாண் மூன்று தலைகளுடனும், கை மற்றும் மடி மீது நிறைய குழந்தைகள் உடன் அமர்ந்து இருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பட தலைப்பில் விந்து தொடர்பான குறியீடும் இடம் பெற்றுள்ளது. இந்துக்களின் கடவுளான பிரம்மா உடன் ஒப்பிட்டு ஹரிஷ் கல்யாணின் போட்டோவை வெளியிட்டு இருப்பது இந்து மத உணர்வாளர்கள் இடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஒரு படைப்பாளிக்கு தங்களது கருத்துக்களை சொல்ல சுதந்திரம் உள்ளது. சமீபகாலமாக மத ரீதியிலான, குறிப்பாக இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலான காட்சிகளும், போஸ்டர்களும் அதிகளவில் வெளியிடப்பட்டு, அதை வைத்தே படத்திற்கு ஒரு சீப்பான பப்ளிசிட்டியை சினிமாக்காரர்கள் உருவாக்கி, ஓட வைக்கலாம் என நினைக்கிறார்கள். இது என்ன மாதிரியான படைப்பு சுதந்திரம் என தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் - சசிகலா வசனக்காட்சி நீக்கம் - லைகாதர்பார் - சசிகலா வசனக்காட்சி நீக்கம் ... தர்பார் - பெயர் சொல்லாததற்கே பின் வாங்கல் தர்பார் - பெயர் சொல்லாததற்கே பின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

11 ஜன, 2020 - 10:30 Report Abuse
Prasanna Krishnan Nonsense. How dare you abuse our brahmma ? just for money.
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
11 ஜன, 2020 - 00:06 Report Abuse
vivek c mani ஹிந்துக்களை கேவலப்படுத்தும் செய்கைகள் தமிழ்நாட்டில்தான் வெகு பரவலாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இத்தகைய அவலநிலை கிடையாது. ஹிந்துக்கள் பொங்கியெழும் வரை இவர்கள் மேலும் மேலும் தங்கள் இழிசெயல்களை விடமாட்டார்கள். ஹிந்துக்கள் அமைதியாத்தானே எதிர்க்கிறார்கள் அடிதடியில் இறங்குவதில்லை என்பதால் வரும் தைரியம் இது. சாது மிரண்டால் கடும் கொள்ளாது எனும் பழமொழியை இவர்கள் நினைவு கூர்வது அவசியம்.
Rate this:
Changes - Pkt,இந்தியா
10 ஜன, 2020 - 23:40 Report Abuse
Changes மாமா மன்னா, படம் படமாக இல்லாமல் பிரச்னையா அல்லவா இருக்கிறது, என்ன செய்ய?
Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
10 ஜன, 2020 - 20:30 Report Abuse
Murugan இந்துக்கள் எல்லாம்மவுனமாக பார்ப்பதை தவிர்த்தால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுவார்கள் .
Rate this:
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
10 ஜன, 2020 - 20:13 Report Abuse
தஞ்சை மன்னர் படத்தை படமா பாருங்க பாஸ் ( ஏதோ விஸ்வரூபம் பட நிஜபாகத்துக்கு வந்து போகுது )
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in