18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
சுதா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள படம் ‛சூரரைப்போற்று'. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானதை அடுத்து படத்தின் கதை குறித்து வெளியாகி வரும் ஒரு கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் சுதா. அவர் கூறுகையில், இந்த படத்தின் கதை ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த படம் அவரது வாழ்க்கை வரலாறு அல்ல. ஆனால் இந்த கதையில் உள்ள சில விசயங்கள் அவரது வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
அதோடு, ரூ. 6 ஆயிரம் மட்டுமே வைத்திருந்த ஒரு ராணுவ வீரர் எப்படி ஏர்லைன்ஸ் நிறுவனராக மாறினார் என்பது உலகிற்கு தெரியாத விசயம். அதனால் அதுபோன்ற விசயங்கள் இந்த படத்தில் இருப்பதால் அது ரசிகர்களுக்கு புதிய தகவலாக இருக்கும் என்று தெரிவித்துள்ள சுதா, இந்த படத்தில் பல நாட்கள் விமானத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். அதற்காக ஒரு நாள் விமான வாடகையே ரூ. 47 லட்சம் கொடுத்தார் சூர்யா. அந்த அளவுக்கு இந்த படத்தை கணக்குப்பார்க்காமல் அதிகப்படியான பட்ஜெட்டில் அவர் தயாரித்துள்ளார் என்கிறார்.