வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தார். அவரது நிர்வாகத்திற்கு எதிராக மற்றொரு அணி உருவானது. எதிர் அணி விஷால் நிர்வாகத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதன் காரணமாக தமிழக அரசு, தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை அதிகாரி சேகர் என்பவரை தனி அதிகாரியாக நியமித்தது. அவருக்கு உதவ ஆலோசனை குழு ஒன்றையும் அமைத்தது.
ஆலோசனைக் குழுவில் உள்ள சிலர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போதைய தனி அதிகாரி சேகர் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாவட்ட பதிவாளர் மஞ்சுளா தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஒரு ஆண்டு இந்த பொறுப்பில் இருப்பார். ஆலோசனை குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.