Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 ஆயிரம் பாடல்.... ‛காந்த குரலோன் யேசுதாஸ் : மோடி பிறந்தநாள் வாழ்த்து

10 ஜன, 2020 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Modi-Birthday-wishes-to-KJ-Yesudas

வயதோ 80... ஆனாலும் இன்றும் அந்த குரலில் ஒரு ஈர்ப்பு. பத்மவிபூஷண் விருது, 8 முறை தேசிய விருது,, மாநில விருதுகள் 43 முறை, 50 ஆயிரம் பாடல்கள்.... என தன் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் எனும் கே.ஜே.யேசுதாஸ். இன்று 80வது பிறந்தநாளும் காணும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாரத பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் வாழ்த்து கூறியிருக்கிறார்.

அதில், ‛‛பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கே.ஜே.யேசுதாசுக்கு அவரது 80 வது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இனிமையான இசை மற்றும் ஆத்மார்த்தமான குரல்வளம் அனைத்து வயதினரிடமும் புகழ் பெற்றுள்ளது. இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

காந்த குரோலனின் இசை பயணம்

இளம் வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக் கொண்ட கே.ஜே.யேசுதாஸ், 1940ம் ஆண்டு, ஜன., 10ம் தேதி கேரளாவில் பிறந்தார். தனது ஆரம்ப கால இசைப் பயிற்சியினை தனது தந்தையிடமே கற்றுத் தேர்ந்தார். பிறகு ஆர்.எல்.வி மியூசிக் அகாடமியில் சேர்ந்து இசைப் பயின்றார். அதன்பின் இசையில் உயர் கல்வி பயில திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்து இசைப் பயின்றார்.
நிதி நிலைமை காரணமாக அங்கே அவரால் தொடர்ந்து கல்வியை தொடர முடியாமல் போனாலும் பயின்ற காலங்களில் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற இசை ஆசான்களின் அறிமுகம் கிடைத்து, அவர்களிடம் நற்பெயரும் பெற்றார். 1961 ஆம் ஆண்டு நடிகர் பிரேம் நசீர் நடிப்பில் வெளிவந்த "கால்பாடுகள்" என்ற மலையாளத் திரைப்படத்தில் பாடியதின் மூலம் திரையிசையில் கால்பதித்தார்.

தமிழில் இவர் பாடிய முதல் திரைப்பட பாடல் "நீயும் பொம்மை நானும் பொம்மை" என்று ஆரம்பமாகும் "பொம்மை" திரைப்படப் பாடல். வீணை எஸ் பாலசந்தர் இயக்கி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதன் பின் "காதலிக்க நேரமில்லை" "பறக்கும் பாவை" "துலாபாரம்" என்று இவர் தமிழ் படங்களில் ஒருசில பாடல்கள் பாடியிருந்தாலும் 1973ஆம் ஆண்டு எம் ஜி ஆர் தயாரித்து இயக்கிய "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தில் இவர் எம் ஜி ஆருக்காக பாடிய "தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே" என்ற பாடலுக்குப் பின் ஏராளமான பாடல்களை பாடலானார்.

குறிப்பாக "உலகம் சுற்றும் வாலிபனுக்கு" பின் வந்த அத்தனை எம் ஜி ஆர் படங்களிலும் இவருடைய பாடல்கள் இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். 70களில் இவர் பாடிய அத்தனை பாடல்களும் ரசிகர்கள் நெஞ்சங்களில் இன்றளவும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. "விழியே கதை எழுது", "மலரே குறிஞ்சி மலரே", "தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு", "இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில்" "ஒன்றே குலமென்று பாடுவோம்" போன்ற சாகாவரம் பெற்ற இவருடைய பாடல் பட்டியல் இன்னும் நீளும்.
"காயங்குளம் கொச்சுண்ணி" "அனார்கலி", "காவ்யமேளா" "நிறைகுடம்", "அச்சாணி", "நந்தனம்" மற்றும் "பாய் ப்ரண்ட்" போன்ற ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்தும் இருக்கிறார். 1970-ல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்தில் பாடியதன் வாயிலாக இந்தியிலும் தனது திரையிசைப் பயணத்தை தொடங்கினார். ஆனாலும் அங்கே இவர் பாடி முதலில் வெளிவந்த திரைப்படம் "சோட்டி சி பாத்" ஆகும். இப்படத்தில் இவர் பாடிய "கோரி தேரா காவுன் படா" என்ற பாடல் இந்தியில் மட்டுமின்றி அனைத்து மொழி மக்களாலும் இன்றும் ரசிக்கக்கூடிய ஒரு பாடல் என்றால் அது மிகையன்று.

சபரிமலையில் நடை சாத்தப்படுவதற்கு முன் இவருடைய "ஹரிவராஸனம்" பாடலை இசைத்து அதன் பின் நடை சாத்துவது வழக்கமான ஒன்றாக கடைபிடித்து வருவது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய தனது 60 ஆண்டுகால கலைப்பயணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, மராத்தி, ஆங்கிலம் மற்றும் ருஷ்ய மொழி என 14 மொழிகளில் ஏறக்குறைய 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்திருக்கிறார்.
யேசுதாஸ் பாடிய தமிழ் தனிப் பாடல்கள் சில....

1. நீயும் பொம்மை நானும் பொம்மை - பொம்மை
2. காற்றினிலே பெரும் காற்றினிலே - துலாபாரம்
3. தெய்வம் தந்த வீடு - அவள் ஒரு தொடர் கதை
4. அதிசய ராகம் - அபூர்வ ராகங்கள்
5. யாருக்கு யார் சொந்தம் - மாலை சூடவா
6. வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - மயங்குகிறாள் ஒரு மாது
7. மலைச் சாரலில் ஒரு பூங்குயில் - ஒரு குடும்பத்தின் கதை
8. என்னை விட்டால் யாருமில்லை - நாளை நமதே
9. ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க
10. உன்னிடம் மயங்குகிறேன் - தேன் சிந்துதே வானம்
11. மேலும் கீழும் கோடுகள் போடு - யாருக்கும் வெட்கமில்லை
12. எனது வாழ்க்கை பாதையில் - மோகம் முப்பது வருஷம்
13. இந்த பச்சைக் கிளிக்கொரு - நீதிக்கு தலைவணங்கு
14. இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் - ஊருக்கு உழைப்பவன்
15. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் - ஊருக்கு உழைப்பவன்
16. நல்ல மனம் வாழ்க - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
17. தானே தனக்குள் ரசிக்கின்றாள் - பேரும் புகழும்
18. இறைவன் உலகத்தை படைத்தானா - உனக்காக நான்
19. நாளை உலகை ஆள வேண்டும் - உழைக்கும் கரங்கள்
20. அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க
21. உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
22. அக்கரை சீமை அழகினிலே - ப்ரியா
23. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் - முள்ளும் மலரும்
24. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே - ப்ரியா
25. ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா - இளமைக் கோலம்
26. வச்சப் பார்வை தீராதடி - இளமைக் கோலம்
27. என் இனிய பொன் நிலாவே - மூடுபனி
28. வேதம் நீ இனிய நாதம் நீ - கோயில் புறா
29. அழகே அழகு - ரரிபார்வை
30. ஒரு ராகம் பாடலோடு - ஆனந்த ராகம்
31. காக்கை சிறகினிலே நந்தலாலா - ஏழாவது மனிதன்
32. கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை
33. பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை
34. ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு
35. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் - வாழ்வே மாயம்
36. பூ வாடைக் காற்றே சுகம் கொண்டு வா - மை டியர் குட்டிச்சாத்தான்
37. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு - நல்லவனுக்கு நல்லவன்
38. ஊர தெரிஞ்சுகிட்டேன் - படிக்காதவன்
39. பூவே பூச்சூடவா - பூவே பூச்சூடவா
40. பூமாலை வாங்கி வந்தான் - சிந்து பைரவி
41. கலைவாணியே உனைத்தானே - சிந்து பைரவி
42. ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீராகவேந்திரர்
43. தன்ணி தொட்டி தேடி வந்த - சிந்து பைரவி
44. என்ன தேசமோ இது என்ன தேசமோ - உன் கண்ணில் நீர் வழிந்தால்
45. ஆராரோ பாடியதாரோ - தாய்க்கு ஒரு தாலாட்டு
46. சின்ன சின்ன ரோஜாப் பூவே - பூவிழி வாசலிலே
47. ராஜ ராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி
48. நீ பௌர்ணமி என்றும் - ஒருவர் வாழும் ஆலயம்
49. பூவே செம்பூவே - சொல்ல துடிக்குது மனசு
50. பழமுதிர் சோலை எனக்காகத்தான் - வருஷம் 16

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார்' - ரிலீஸ் தேதி தவறா ?'தர்பார்' - ரிலீஸ் தேதி தவறா ? தர்பாருக்கு தடையும், தடை மீறலும் தர்பாருக்கு தடையும், தடை மீறலும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mukambikeswaran sukumar - bangalore ,இந்தியா
11 ஜன, 2020 - 15:01 Report Abuse
mukambikeswaran sukumar பாரத ரத்னாவிற்கு அனைத்து விதத்திலும் தகுதியானவர் ஜேசுதாஸ் அவர்கள்.
Rate this:
10 ஜன, 2020 - 20:14 Report Abuse
இனியவன் கொஞ்சம் கவனம் தேவை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in