Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி ஒரு பெருமைமிகு தமிழன்: கமல் புகழாரம்

10 ஜன, 2020 - 13:12 IST
எழுத்தின் அளவு:
Kamal-praises-Rajini

சென்னை : எங்கோ பிறந்திருந்தாலும் இப்போது பெருமை மிகு தமிழனாக நண்பர் ரஜினிகாந்த் திகழ்கிறார் என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணித்தை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். ரஜினி எப்படியும் அரசியலுக்கு வந்தே தீருவேன் என கூறி வருகிறார். சமகாலத்து நடிகர்களான இருவரும், சமீபமாக அரசியலிலும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இருவரும் இணைந்து பயணிக்கும் திட்டத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் காலில் செய்த ஆபரேஷனால் ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் அரசியல் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

கமல் பேசுகையில், காலத்தின் தேவையாக இருந்த திராவிட அரசியல் இன்று தனிநபர்களின் தேவையாக மாறிவிட்டது. திராவிட அரசியலை சரியான பாதையில் எடுத்து செல்ல வேண்டும். ரஜினி என் நண்பர். தமிழகம் அவருக்கு நிறைய உதவி செய்தது. இப்போது அவர் தமிழகத்திற்கு உதவ வேண்டும். வேறு எங்கோ பிறந்திருந்தாலும் அவரும் இப்போது பெருமை மிகு தமிழர் ஆகிவிட்டார் என்றார்.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமலிடம், விமான நிலையத்தில் ரஜினி குறித்த கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கமல், ‛‛தமிழ்நாட்டிற்கு எல்லா தமிழர்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். உழைப்பை, வியர்வையை, பணம் படைத்தவர்கள் முதலீட்டை செய்ய வேண்டும். எல்லோருக்கும் நான் பொதுவாக சொன்னது. ரஜினிக்கும் இது பொருந்தும். அந்த கடமை அவருக்கும் உள்ளது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார்' - முதல் நாள் வசூல் எவ்வளவு?'தர்பார்' - முதல் நாள் வசூல் ... 'தர்பார்' - ரிலீஸ் தேதி தவறா ? 'தர்பார்' - ரிலீஸ் தேதி தவறா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in