Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

நிராகரிக்கப்பட்ட பாடல்கள் தான், ஹிட் ஆகின : ஆதி

10 ஜன, 2020 - 00:44 IST
எழுத்தின் அளவு:
Rejected-songs-becomes-hit-says-Hiphop-Aadhi

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள, நான் சிரித்தால் படம், அடுத்த மாதம் வெளியாகிறது. படம் குறித்தும், தன் இசைப்பயணம் குறித்தும், அவருடன் பேசியதிலிருந்து:

நான் சிரித்தால் எந்த மாதிரியான படம்?


இது, காமெடி படம். ரவிக்குமார், ரவிமரியா, முனிஸ்காந்த், படவா கோபி, ஐஸ்வர்யா மேனன் என, நடிகர் பட்டாளமே இருக்கு. அப்பாவியான ஒரு பையனுக்கும், டாமினேட் செய்யும் பொண்ணுக்கு இடையே நடக்கும் காதல் கதை. படத்தில், காந்தி என்ற கதாபாத்திரத்தில்


நடித்துள்ளேன். அழுகை வந்தாலும் சிரிக்கணும்; கோபம் வந்தாலும் சிரிக்கணும். ஆனால், அதில் வித்தியாசம் இருக்கணும். இப்படம், நடிப்புக்கு பெரும் சவாலாக, நல்ல அனுபவமாக இருந்தது.
நீங்களே படத்தை இயக்கி நடிப்பதற்கும், மற்றொருவர் இயக்கத்தில் நடிப்பதற்கும்


உள்ள வித்தியாசம்?


நிறைய வித்தியாசம் இருக்கிறது. இயக்குனராக இருக்கும் போது, நிறைய வேலை இருக்கும். மீசையை முறுக்கு படத்தை இயக்கும் போது, ரொம்பவே அழுத்தம் இருந்தது. அது, ஆரம்ப படம் என்பதால், ஒரு வெறியோடு எடுத்தேன். நட்பே துணை படத்தில், இயக்குனருடன் நல்ல ஒத்துழைப்பு இருந்தது. நான் சிரித்தால் படத்தில், இயக்குனர் என்ன கூறியிருந்தாரோ, அவ்வாறாகவே நடித்தேன்.
நாயகனாக இருக்க ரொம்ப சிரமப்படணுமே?


சந்தோஷமாக இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன். அகத்தின் அழகு முகத்தில்

தெரியும். அவ்வளவு தான்,


நம்ப மீட்டர்.இசை, இயக்கம், நடிப்பு என, துறுதுறுவென இருக்கிறீர்களே?


சின்ன வயதில், நான் எப்போதும் வீட்டில், எதையாவது உருட்டியபடியே இருப்பேன் அல்லது எதையாவது உடைப்பேன். அதுவே வளர்ந்த பின், தொழில்ரீதியாக எதையாவது செய்தபடியே இருக்க துாண்டுகிறது.


உங்கள் படத்தில் மட்டும், பாடல்கள், ஹிட் ஆகிறதே?


மற்ற படங்களுக்கு கொடுத்து, அவர்கள் நிராகரித்த பாடல்களைத் தான், என் படங்களில் பயன்படுத்தினேன். அவை, ஹிட் ஆகின. என் படத்தில், நான் சுதந்திரமாக வேலை பார்ப்பேன். இசைக்குள் ரொம்ப ஆராய கூடாது; அனுபவிக்க வேண்டும், அவ்வளவு தான்.


கிளப்புல மப்புல... பாட்டு பரவலாகி, விமர்சனங்களை சந்தித்ததே?


அந்த பாடல், ஹிட் ஆனது ஒரு விபத்து. ஹிப்ஹாப் தமிழா ஆல்பத்தில், கிளப்புல மப்புல... பாடலே முதலில் இல்லை. மக்கள் அதிகம் விரும்பியதால், அதை ஆல்பத்தில் போட வேண்டியதாகி விட்டது. இரவு துாங்கி, காலையில் எழுந்து பார்த்தால், பாடல் பெரிய ஹிட் ஆகியிருந்தது. அதே வேளையில், சில கண்டனங்களும் எழுந்தன. அது ஒரு, மேஜிக் மொமென்ட்!


ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து?


அரசியல் பேச, எல்லாருக்கும் உரிமை உண்டு. அதை ஆதரிக்கிறோமா, இல்லையா என்பது, அவரவர் தனிப்பட்ட கருத்து. எனக்குள் ஒரு சில அரசியல் விஷயங்கள் இருக்கும். அது இவர்களுடன், கனெக்ட் ஆகலாம், ஆகாமல் போகலாம்.


எதிர்கால ஆசை?


சுதந்திர இசைக்கு, முக்கியத்துவம் தரணும். இதற்காக தான், நான் சினிமாவுக்கு வந்தேன். சில படங்களில் பணியாற்றி, மீண்டும் சுதந்திர இசைக்கு திரும்பியுள்ளேன். படத்தில் மட்டுமல்லாது, தனிப்பட்ட கருத்தை சொல்ல, சுதந்திர இசை மேடை இருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா ஆசை இருந்தாலும் பொருளாதாரத்தையும் யோசிக்கணும் : ‛சின்னதம்பி' மார்த்தாண்டன்சினிமா ஆசை இருந்தாலும் ... அதுல்யாவின் ஆசைப் பொங்கல் அதுல்யாவின் ஆசைப் பொங்கல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in