Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' பிசினஸ் ஓவர்...?

09 ஜன, 2020 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Master-Business-over

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்து வருகிறது. டிசம்பர் 31ம் தேதியன்று படத்தின் தலைப்பையும், முதல் பார்வையையும் வெளியிட்டார்கள். அதற்கடுத்த சில நாட்களிலேயே இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடப்பதாக செய்திகள் வெளிவந்தன.

படத்தை இணைந்து தயாரிக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமே படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை, கர்நாடகா உரிமை ஆகியவை விற்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இப்போது படத்தின் வெளிநாட்டு உரிமையை யுனைட்டெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் மாலிக் ஸ்டிரீம்ஸ் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

'பிகில்' படம் விற்கப்பட்டதை விட கூடுதல் விலைக்குதான் 'மாஸ்டர்' வியாபாரம் நடைபெற்று வருகிறதாம். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான 'கைதி' யும் வெற்றி, விஜய் நடித்து முன்னர் வெளிவந்த 'பிகில்' படமும் வெற்றி என்பதால் இவர்கள் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஏப்ரல் மாதம் 'மாஸ்டர்' வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திண்டுக்கல் - பேனர்களைக் கிழித்த ரஜினி ரசிகர்கள்திண்டுக்கல் - பேனர்களைக் கிழித்த ... கோடையில் மோதும் விஜய் - சூர்யா கோடையில் மோதும் விஜய் - சூர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஜன, 2020 - 08:46 Report Abuse
Indian Dubai BIGIL utter flop.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 ஜன, 2020 - 18:08 Report Abuse
Vasudevan Srinivasan இப்படி அவசரம் அவசரமாக வியாபாரம் பேசுவது நல்லதல்ல படம் முடிந்த பிறகுதான் முழுமையான விவரம் தெரியும் அதற்கு தக்க விலை பேச வேண்டும் அதை விடுத்து முன்னதாகவே வியாபாரம் பேசுவது... வேண்டாம் நல்லதை மட்டும் பேசுவோம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in