Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பாருடன் இணைந்த சைக்கோ

09 ஜன, 2020 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Psycho-trailer-attached-with-Darbar

டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் படம் ‛சைக்கோ'. மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி சென், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளார்கள். 2020 ஜனவரி 24 அன்று படம் வெளியாகிறது.

இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நேற்று டிரைலர் வெளியானது. இன்று தர்பார் படத்துடனும் டிரைலரை இணைத்துள்ளனர். இதுகுறித்து அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது: சைக்கோ படத்தின் பாடலுக்கும், டீசருக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. டீசருக்கு இளையராஜா வாசித்திருக்கும் பின்னணி இசை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் தர்பார் படத்தின் திரையிடலோடு சைக்கோ படத்தின் டிரைலரும் இணைந்து வெளியாகிறது. பாடல், டீசர் என ரசிகர்கள் சைக்கோ படத்தின் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகிறார்கள். வரும் 24ந் தேதி அன்று சைக்கோ படத்தை திரைக்கு கொண்டு வருகிறோம். ரசிகர்கள் நிச்சயம் படத்தையும் கொண்டாடுவார்கள் என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் பிலிம்மில் படமாகும் காட்சிமீண்டும் பிலிம்மில் படமாகும் காட்சி அடுத்த சாதனைக்கு தயாராகிறார் பார்த்திபன் அடுத்த சாதனைக்கு தயாராகிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11 ஜன, 2020 - 04:54 Report Abuse
J.V. Iyer உதயநிதிக்கு சைக்கோ பட்டம் கொடுக்கலாம். பொருத்தமாக இருக்கும்.
Rate this:
09 ஜன, 2020 - 21:09 Report Abuse
இனியவன் தர்பார் பார்த்துட்டு வெளியே வருபவர்கள் சைக்கோவாகத்தான் வருகிறார்கள். இந்த படத்தோட ஏன் சைக்கோ திரைப்படத்தை இணைத்து பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள்.
Rate this:
Kamaraj -  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன, 2020 - 15:29 Report Abuse
Kamaraj waste movie
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in