Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பிலிம்மில் படமாகும் காட்சி

09 ஜன, 2020 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Vaazhl-movie-made-in-film

சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் திரைப்படங்கள் பிலிம் கேமராவில் படமாக்கப்பட்டு வந்தது. முதன்முறையாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் டிஜிட்டலை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். அதன் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது எல்லா திரைப்படங்களும் டிஜிட்டலில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிலிம் பயன்பாடும், பிலிம் கேமராக்களும் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு விட்டது. கடைசியாக பிலிமில் தயாரான படம் ஷங்கர் இயக்கிய ஐ படமாகும். இந்த நிலையில் மீண்டும் பிலிம் கேமராவில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அருவி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் பிரபு. சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் ‛வாழ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை எஸ்.கே. பிலிம்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். பிரதீப் ஆண்டனி பானு, டியா தயால், ஆரவ் பட், நம்பி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் சில காட்சிகள் பிலிம் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது.

அருண் பிரபு கூறியதாவது: வாழ் படம் இயற்கையின் சக்தியை வெளிப்படுத்தும் படமாக உருவாகி வருகிறது. இதில் 1930ஆம் ஆண்டு நடக்கும் காட்சிகள் பிலிம் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக 20 ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்னதான் டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டாலும் பிலிம் கேமராவுக்கு இணையாக அதன் தரம் இல்லை. நாங்கள் படமாக்கிய காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். படப்பிடிப்புகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் நடந்து வருகிறது. இந்தோனேசியா வனப்பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛தர்பார் - ரசிகர்களாக மாறிய குடும்பத்தினர், திரைநட்சத்திரங்கள்‛தர்பார் - ரசிகர்களாக மாறிய ... தர்பாருடன் இணைந்த சைக்கோ தர்பாருடன் இணைந்த சைக்கோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in