Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛தர்பார் - ரசிகர்களாக மாறிய குடும்பத்தினர், திரைநட்சத்திரங்கள்

09 ஜன, 2020 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Celebrities-watched-Darbar-FDFS

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‛தர்பார் படம் பொங்கல் விருந்தாக இன்று(ஜன., 9) வெளியாகி உள்ளது. ரஜினி படம் வெளியாகிறது என்றாலே தமிழகம் முழுக்க திருவிழா கொண்டாட்டம் தான். அதன்படி அதிகாலை முதலே ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் ரசிகர்களாக திரை நட்சத்திரங்களும் தர்பார் படத்தை முதல் காட்சியாக பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இன்றைக்கு இருக்கும் பல திரை நட்சத்திரங்களுக்கு முன்னோடியாக திகழ்பவர் ரஜினி. இந்த வயதிலும் அவரின் வியாபார எல்லை எட்ட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அதனால் அவரின் ரசிகர்களாக இருக்கும் சிம்பு, சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் மேனன், லிங்குசாமி உட்பட பலரும் தர்பார் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் கண்டு களித்தனர்.





ரஜினி குடும்பத்தினர் கொண்டாட்டம்

சென்னை ரோகிணி தியேட்டரில் தர்பார் படத்தை, லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா, விசாகன், அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்தர் உட்பட ரஜினி குடும்பத்தினர் கண்டு களித்தனர். ரஜினி திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியின் போதும் சவுந்தர்யா, துள்ளி குதித்து ஆரவாரம் செய்தார்.




Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலேசியாவிலும் வெளியானது தர்பார்மலேசியாவிலும் வெளியானது தர்பார் மீண்டும் பிலிம்மில் படமாகும் காட்சி மீண்டும் பிலிம்மில் படமாகும் காட்சி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
10 ஜன, 2020 - 21:51 Report Abuse
பெரிய ராசு வேஸ்ட் பெல்லோஸ்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in