பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வெளிவந்த தபங் 3 படத்தில் கன்னட நடிகரான நான் ஈ புகழ் சுதீப் நடித்தார். அப்படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் 100 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. கன்னடத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் சுதீப், தன் படத்தில் வில்லனாக நடித்ததற்காக அவருக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யு கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் சல்மான் கான்.
அது பற்றி புகைப்படத்துடன் டுவிட்டரில், “நாம் நல்லதைச் செய்யும் போது நல்லதே நடக்கும். இந்த வரிகளை நம்ப வைக்கும் அளவிற்கு சல்மான்கான் எனது வீடு தேடி வந்து ஆச்சரியப்படுத்தினார். பிஎம்டபிள்யு எம் 5. என் மீதும் என் குடும்பத்தின் மீதும் நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததும், நீங்கள் வந்ததும் பெருமைக்குரிய விஷயம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.