முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
படம்: பராசக்தி
வெளியான ஆண்டு: 1952
நடிகர்கள்: சிவாஜிகணேசன்,
பண்டரிபாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம்
இயக்கம்: கிருஷ்ணன்- - பஞ்சு
தயாரிப்பு: ஏ.வி.மெய்யப்பன், பி.ஏ.பெருமாள்
'சக்சஸ்' என்றபடியே, திரையுலகில், சிவாஜிகணேசன் அறிமுகமான படம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின், அனல் பறக்கும் வசனத்தில் உருவான இப்படம், பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 'ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்ற வசனம், இன்றும் தன் வலிமை குன்றாமல் இருப்பது, கருணாநிதியின் எழுத்துக்கு சான்று.
அன்றைய பர்மா, இன்றைய மியான்மரில் வசிக்கும் சிவாஜிகணேசன், இரண்டாம் உலகப்போர் நிர்பந்தம் காரணமாக, தன் சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார். இங்கு, மோசடி பெண்ணால், தன் பணத்தை பறிகொடுக்கிறார். தந்தையையும், கணவனையும் இழந்து வாடும் தங்கையோ, தன் கைக்குழந்தையுடன், குடிசையில் வாழ்கிறாள். அவளை, ஊரில் உள்ள பணக்காரர் அடைய துடிக்கிறார்.
தப்பியோடியவள், கோவிலுக்கு செல்கிறாள்; அங்கு பூசாரி தொல்லை கொடுக்கிறார். அங்கிருந்து சென்று, தற்கொலைக்கு முயற்சி செய்கையில், காவல் துறை கைது செய்கிறது. இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது... அப்போது, சிவாஜி பேசும் வசனங்கள் தான், இறுதி காட்சி. குடும்பம், சரித்திரம், புராணம் என, முக்கோணத்திற்குள் சுழன்றுவந்த தமிழ் திரையுலகை, பகுத்தறிவு பக்கம் அழைத்து சென்றது, பராசக்தி.