Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிர்வலைகளை ஏற்படுத்தும் திரௌபதி டிரைலர்: படத்துக்கு தடைகேட்டு புகார்

07 ஜன, 2020 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-Draupathi-movie

அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் நடித்துள்ள படம் ‛திரௌபதி'. அவருடன் டூலெட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ‛பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை இயக்கிய ஜி.மோகன் இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் ஆணவ கொலைகளுக்கு ஆதரவாகவும், கலப்பு திருமணத்துக்கு எதிராகவும் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்கில் பரபரப்பாக விவாதித்தனர்.

இந்த நிலையில் படத்துக்கு கேட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2ம் தேதி 'திரௌபதி' என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் யூ-டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை மோகன் என்பவர் இயக்கியுள்ளார்.
மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சாதி மறுப்பு திருமணங்கள் அனைத்துமே நாடக காதலாக நடக்கிறது. அப்படி சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்வதை ஒரு வேலையாகவே செய்ய வேண்டும் என்று வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 90க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கே ஊறுவிளைவிக்கும் மிகப்பெரும் பிரச்னையாக ஆணவப்படுகொலை கடந்த சில ஆண்டுகளாக மாறியுள்ள நிலையில், ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாகவுள்ளது. எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
கேத்ரின் தெரசா, யோகிபாபு பெயரில் பணமோசடி: தயாரிப்பாளர் புகார்கேத்ரின் தெரசா, யோகிபாபு பெயரில் ... 1917 படத்துக்கு கோல்டன் குளோப் விருது 1917 படத்துக்கு கோல்டன் குளோப் விருது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Sham - Ct muththur,இந்தியா
11 ஜன, 2020 - 22:27 Report Abuse
Sham தினமலருக்கு என்ன ஆனது..? அப்பாவி பெண்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்திற்கு எதிராகவும் சமூகவிரோதிகளுக்கு ஆதரவாக இருப்பது போலவும் எதற்காக இந்த செய்தியை வெளியிட்டது... புரியவில்லை..
Rate this:
Sri,India - India,இந்தியா
11 ஜன, 2020 - 11:24 Report Abuse
 Sri,India இந்தப்படம் வந்தால் பெண்கள் தெளிவாகி அப்பா அம்மா பாசத்தில் மட்டுமே இருந்து விடுவார்களோ என திருட்டு கட்ட பஞ்சாயத்து கூட்டம் பயப்படுகிறது ....வேறு வருமானத்திற்கு வகை இல்லாமல் கூட்டம் காலியாகி விடுமே??
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
09 ஜன, 2020 - 17:37 Report Abuse
Subramanian Arunachalam நாடக காதலினால் நல்ல பணம் பார்த்த கூட்டம் தான் இந்த புகாரை அளித்துள்ளது
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
09 ஜன, 2020 - 16:19 Report Abuse
Endrum Indian அஜீத் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்???கிறித்துவர்களா இவர்கள்???
Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
09 ஜன, 2020 - 15:45 Report Abuse
Tamilachi சாதி வசனம் பேசி ரஞ்சித் படம் எடுத்தா கருத்துரிமை....அதையே மற்றவர்கள் எடுத்தால் சாதி வெறியா ?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in