Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கைதி'க்கு நானும் இயக்குனர் தான் - கமல்ஹாசன்

06 ஜன, 2020 - 15:26 IST
எழுத்தின் அளவு:
I-am-also-director-to-Kaithi-says-Lokesh-Kanagaraj

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான இயக்குனர்களில் ஒரு சிலர் குறிப்பிடும்படியான இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம், கைதி' இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவருக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு மூன்றாவது படத்திலேயே அமைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க ஒரு படம் தயாராகப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் சந்திப்பும் நடந்துள்ளது. எது நடக்குமோ தெரியவில்லை, ஆனால், கமல், லோகேஷ் கூட்டணியில் ஏதோ ஒன்று நடக்க உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜீ தமிழ் சினிமா விருதுகள் நிகழ்வில் இது பற்றி மேடையிலேயே இருவரும் தெரிவித்தனர்.

லோகேஷ் பேசுகையில், “நான் யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. எனது வாழ்க்கையில் கமல்ஹாசன் நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்த ஒரு நல்ல விஷயத்தை மட்டும் செய்திருக்கிறேன். அவருடைய படங்கள் தான் எனக்கு 'கைதி' எடுக்க இன்ஸ்பிரேஷன் தந்தது,” என்றார்.

அடுத்து பேசிய கமல்ஹாசன், “லோகேஷுக்கு என்னுடைய படங்கள் இன்ஸ்பிரேஷன் என்பது மகிழ்ச்சி. அந்த விதத்தில் நானும் 'கைதி' படத்தின் இயக்குனர் தான். நானும் சில விஷயங்களைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இருந்தாலும் வேறு ஒரு நிகழ்வில் அதைச் சொல்கிறேன்” என்றார்.

விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு படத்தின் தகவலாக அது இருக்கலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியுடன் போட்டி போடும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன்ரஜினியுடன் போட்டி போடும் மகேஷ் பாபு, ... பாஜக.,வில் இணையப் போகும் ரஜினிகாந்த் நண்பர் பாஜக.,வில் இணையப் போகும் ரஜினிகாந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07 ஜன, 2020 - 08:51 Report Abuse
Natarajan Ramanathan இரண்டு நல்ல படங்களை இயக்கிய லோகேஷ் மூன்றாவதாக ஜோசப் விசய் படத்தை இயக்கும் நிலைக்கு தரம் தாழ்ந்து விட்டது வருத்தமான விஷயம்தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in