Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே-ல் துவங்குகிறது விஜய் சேதுபதி - பொன்ராம் படம்

06 ஜன, 2020 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi---Ponram-movie-to-be-start-on-May

சீமராஜா படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் எம்.ஜி.ஆர்., மகன். சசிகுமார், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு முன்பாக விஜய் சேதுபதியை வைத்து கிராமத்து அதிரடி, காதல் நிரம்பிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மசாலா படத்தை பொன் ராம் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இப்போது மே மாதம் விஜய் சேதுபதி படத்தை துவக்க உள்ளார் பொன்ராம்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர்., மகன் படத்துக்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதியை வைத்து எடுக்கப்படவிருக்கும் படத்தை துவங்குவது என தீர்மானித்திருந்தோம். ஆனால், நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ந்து பிசியாகவே இருப்பதால், அவரது படம் தள்ளிக் கொண்டே போனது. அதனால், அதற்கு முன்பாக எம்.ஜி.ஆர்., மகன் படத்தை முடிப்பது என முடிவெடுத்து, அதை முடித்து விட்டோம். நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை, இயக்குநர் சசிகுமார் தயாரிப்பு நிறுவனம் அல்லது முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது.

நடிகர் விஜய் சேதுபதிக்காக உருவாக இருக்கும் படத்துக்கான இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டுமே செய்ய வேண்டி இருக்கிறது. படத்தை திண்டுக்கல்லிலேயே படமாக்க இருக்கிறோம். காரணம், அந்த ஊரை பின்னணியாகக் கொண்ட கதையே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கப்படங்களை கொஞ்சம் கூட, இந்த படம் ஒத்திருக்காது. புதிதாக எடுக்கப்படும். விஜய் சேதுபதிக்கான கேரக்டர், சிறப்பாக வடிவமைக்கப்படும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மஹா : மே மாதம் ரிலீஸ்மஹா : மே மாதம் ரிலீஸ் சேலையில் அழகு தேவதையாக நயன்தாரா சேலையில் அழகு தேவதையாக நயன்தாரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in