சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் சார்பில் வித்தியாசம் தான் அழகு மற்றும் உலகம் பிறந்தது நமக்காக எனும் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். விழாவில் சூர்யாவின் அகரம் பவுண்டேசனுக்கு ராம்ராஜ் வேட்டி நிறுவன அதிபார் நாகராஜ் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சூர்யா பேசியதாவது: அகரம் பத்தாண்டுகளில் 3000 மாணவர்களை படிக்க வைத்திருகிறது. இதன் பின்னணியில் எண்ணற்ற தன்னார்வலர்களின் உழைப்பு இருக்கிறது. எண்ணற்ற நன்கொடையாளர்களின் பங்கேற்பு இருக்கிறது. சமூக அக்கறையுடன் கல்வி வாய்ப்பு அளித்த கல்வி நிறுவனங்கள இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்கு அகரம் அறக்கட்டளை "இணை" எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. எந்த ஒரு தன்னார்வ அறக்கட்டளைக்கும் எந்த வித தோய்வுமின்றி சீராக நடைபெற நிதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அகரம் அறக்கட்டளைக்கு இன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த ராம்ராஜ் காட்டன் நாகராஜிற்கு எனது நன்றி.