Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்பாரில் சங்க விதி மீறல்: அனிருத் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

05 ஜன, 2020 - 12:35 IST
எழுத்தின் அளவு:
dina-planned-to-file-complaint-against-aniruth

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சங்கத்தின் விதிமுறைகளை மீறி தர்பார் படத்திற்கு அனிருத் வெளிநாட்டு இசை கலைஞர்களை பயன்படுத்தி உள்ளா£ர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் இசை அமைப்பாளர் தினா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், 50 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த சங்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் உள்பட 1,200 பேர் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திலும் அங்கம் வகிக்கிறது.


இசை அமைப்பாளார்கள் தங்களுக்கு தேவை என்றால் வெளிநாட்டு இசை அமைப்பாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு சங்கத்தின் முன் அனுமதியை பெற வேண்டும், வெளிநாட்டு கலைஞர்களுடன் 50 சதவிகிதம் இசை கலைஞர்கள் சங்க உறுப்பினர்களை பயன்படுத்த வேண்டும். என்கிற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை அனிருத் பின்பற்றவில்லை.


ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதில், இங்கே உள்ள இசை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு இசை கலைஞர்களுக்கே வழங்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக கடந்த 45 நாட்களுக்கு முன்பு அனிருத்தின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. அதன் பிறகும் அவருடைய இசை சேர்ப்பு பணிக்கு இங்குள்ள இசை கலைஞர்களை அவர் பயன்படுத்தவில்லை. அதைத்தொடர்ந்து அவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கும் அனிருத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.


தர்பார் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி, வெளிநாட்டில் நடந்தது. அதில் கண் துடைப்பு போல் இங்குள்ள கலைஞர்கள் 5 பேர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு கலைஞர்கள் 50 பேர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதுபற்றி கேட்டதற்கு, வருத்தம் மட்டும் தெரிவித்தார் அனிருத்.


அனிருத்தின் பொறுப்பற்ற பதில்கள், சங்கத்தை அவமதிப்பதாக உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் இன்னும் ஒரு சில தினங்களில் செயற்குழுவை கூட்டி அனிருத் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு தினா கூறினார்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் படத்திற்காக வலிமை குழு வெயிட்டிங்தர்பார் படத்திற்காக வலிமை குழு ... விண்வெளி படத்தில் நடிக்கிறார் நித்யா மேனன் விண்வெளி படத்தில் நடிக்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

meenakshisundaram - bangalore,இந்தியா
18 பிப், 2020 - 05:13 Report Abuse
meenakshisundaram ஐயா Anirudh 'லெவெல்' வேறே விட்ருங்கய்யா .கொஞ்ச நாள்லே thaane வேறே வேலை தேட போய்டுவாரு
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
07 ஜன, 2020 - 17:22 Report Abuse
KavikumarRam அட விடுங்கப்பா. ஓவர் சீனு உடம்புக்கு ஆகாது. இதுவும் ஒரு விளம்பரம் தான்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07 ஜன, 2020 - 09:43 Report Abuse
கல்யாணராமன் சு. இந்த சங்கத்திலே முக்கிய பதவி வகிக்கும் எத்தனை பேர்களின் குழந்தைகள் கணினி மென்பொருள் குழுமங்களில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்கிறார்கள்? அப்போ, அந்த நாட்டில் உள்ள குழுமங்களின் ஊழியர்கள் இதே மாதிரி கேட்பது நியாயமா இல்லையா?
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
07 ஜன, 2020 - 03:52 Report Abuse
 nicolethomson இந்த சங்கங்களின் வேலையே குடிகெடுப்பது தானா?
Rate this:
06 ஜன, 2020 - 11:20 Report Abuse
Ramaraj P வட நாட்டு நடிகையே போட்டு போட்டு எடுக்கிறீங்ளே ???
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in