Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்த காலத்திலேயே சாதனை படைத்தவர் ரஜினி: ஹரிஷ் ஷங்கர்

05 ஜன, 2020 - 12:15 IST
எழுத்தின் அளவு:
director-harish-shankar-praises-rajini

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தின், தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் ஹரிஷ் ஷங்கர், நடிகர் ரஜினியை போற்றிப் புகழ்ந்து பேசினார்.


அவர் பேசியதாவது:


நான் இங்கு இயக்குநராக வரவில்லை; ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன். ரஜினியை சந்திக்க நீண்ட நாளாக எனக்கு ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பும்; சந்தர்ப்பமும் அமையவில்லை. இன்று, எல்லோரும் பட வசூல் குறித்துப் பேசுகின்றோம். டி.ஆர்.பி., ரேட்டிங் குறித்தெல்லாம் பேசுகின்றோம். ஆனால், டிஜிட்டல் புரட்சிக்குப் பின், இப்படி நிறைய விஷயங்கள் போட்டியாக வந்துவிட்டன. ஆனால், இப்படி எதுவுமே இல்லாத காலத்திலேயே, நடிகர் ரஜினி தன்னுடைய படங்கள் மூலம் சாதனை படைத்தவர். அப்போதெல்லாம், இதுபோல பட வெளியீட்டுக்கென நிறைய நிகழ்ச்சிகள் கூட நடந்ததில்லை. ஆனால், அப்போதே ரஜினி சூப்பர் ஸ்டார் தான்.


ரஜினியின் சிறப்பு என்னவென்றால், அவர் எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி மக்கள், அவரை அவர்கள் ஊரைச் சேர்ந்தவராக ஏற்றுக் கொள்வார்கள். இதை சொல்லும் போது, அவர் இந்திய சூப்பர் என்றுதான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நடிகர் ரஜினி, இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றி விட்டார். ஆனால், இந்த ஹரிஷ் ஷங்கருடன் பணியாற்றியதில்லை. அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால், நான் மகிழ்வேன்.


இவ்வாறு ஹரிஷ் ஷங்கர் பேசினார்.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒஸ்தி படம்; அடுத்த பாகம் தயாராகவில்லை!ஒஸ்தி படம்; அடுத்த பாகம் ... தர்பார் படத்திற்காக வலிமை குழு வெயிட்டிங் தர்பார் படத்திற்காக வலிமை குழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
06 ஜன, 2020 - 16:05 Report Abuse
Loganathaiyyan ஒரு பஸ் கண்டக்டர் , சினிமாவின் சூப்பர் ஸ்டார் அதைத்தான் ஹரிஷ் சொல்கின்றார்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
06 ஜன, 2020 - 13:58 Report Abuse
oce சிகரெட்டை ஸடைலாக மாற்றி மாற்றி மேலேயும் கீழேயும் தூக்கி வாயில் போட்டு அமுக்கி மெல்லுவது சாதனையா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in