இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
தமிழ் சினிமாவில் மீண்டும் ஆங்கிலப் படத் தலைப்புகள், வேற்றுமொழித் தலைப்புகள் அதிகம் வர ஆரம்பித்துவிட்டன. விஜய்யின் அடுத்த பட தலைப்பை மாஸ்டர் என அறிவித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தின் முதல் பார்வையுடன் படத் தலைப்பும் அறிவிக்கப்பட்டது.
மாஸ்டர் என்ற தலைப்பு வந்ததுமே வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் அதைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். டீ மாஸ்டர், பரோட்டா மாஸ்டர் என ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரில் பதிவிட ஆரம்பித்தார்கள். படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதைக் குறிக்கும் விதத்தில்தான் மாஸ்டர் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
மாஸ்டர் என்ற தலைப்பில் தெலுங்கில் 1997ம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ஒரு படமும், மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த மாஸ்டர்ஸ் என்ற தலைப்பில் 2012லும், ஹிந்தியில் தேவ் ஆனந்த் மகன் சுனில் ஆனந்த் இயக்கத்தில் 2001ல் மாஸ்டர் என்ற படமும் வெளியாகி உள்ளன என்பது கூடுதல் தகவல்.