விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
2019ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மொத்தமாக 10 படங்கள் வரைதான் லாபத்தைக் கொடுத்த படங்களாக இருந்தன. அதே சமயம் தெலுங்குத் திரையுலகத்தில் சுமார் 20 படம் வரை வெற்றிப் படங்களாக அமைந்து லாபத்தைக் கொடுத்துள்ளன.
அந்த 20 படங்களில் தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் செய்யப்பட்ட படங்களான 'காஞ்சனா 3, பிகில், கைதி' ஆகியவை இடம் பிடித்துள்ளன. அதில் 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த விதத்தில் அமைந்த படங்களாக 'காஞ்சனா 3, பிகில், கைதி' ஆகியவை இருந்துள்ளன. வேறு டப்பிங் படங்களில் ஆங்கிலத்திலிருந்து டப்பிங் செய்யப்பட்ட 'அவஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் மட்டுமே அந்த வெற்றிப் பட்டியலில் இணைந்துள்ள. வேறு மொழி டப்பிங் படங்கள் அந்தப் பட்டியலில் இல்லை.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட படங்கள் வெற்றியைக் குவித்திருப்பது ஆச்சரியம்தான்.