ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
பாடகி சுசித்ரா, சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்தார். அவரது காந்தக் குரல், ரசிகர்களுக்கு மட்டுமல்ல; பிரபலமான இசையமைப்பாளர்கள் பலருக்கும் பிடித்திருந்தது. இப்படி பிரபலமாகி வந்த அவரது சமூக வலைதளப் பக்கங்களில், ஹன்சிகா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன், ஆண்ட்ரியா, ஸ்ருதிஹாசன், அனிருத், டி.டி., ரானா, பாடகி சின்மயி ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகின.
இது பாடகி சுசித்ராவுக்கு கடும் தர்மசங்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்து, யாரோ இப்படிப்பட்ட வேலைகளை செய்து விட்டனர். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாடகி சுசித்ரா கூறினார். பின், இதையே வலியுறுத்தி, சென்னை, மாநகர போலீசின் சைபர் க்ரைம் பிரிவில் புகாரும் அளித்தார். இதையடுத்து, மிகுந்த மன அழுத்த நோயால் சுசித்ரா பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் சுசித்ரா, மீண்டும் ஆல்பம் தயாரித்துள்ளார். பாடகர் ரஞ்சித்துடன் ‛ஐ டோண்ட் நோ' என்ற ஆல்பத்தை தனது யு-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுசித்ரா. ரசிகர்களிடம் இது வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே சுசியும், ரஞ்சித்தும் நெருக்கமாக இருப்பது போன்று காட்சிகள் உள்ளதால், இருவரும் நெருக்கமாக பழகுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் சுசித்ரா. அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், பாடகர் ரஞ்சித்தும் இணைந்து பாடியிருக்கும் அந்தப் பாடல், பள்ளி காதலை வெளிப்படுத்தும் பாடல். எங்கள் இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான நட்பு இருக்கிறது. இது காதலாக மாறுமா என்றால், அதெல்லாம் எனக்குத் தெரியாது என்கிறார்.