'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
இயக்குநர் அன்பு இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள வால்டர் படத்தின் டீசரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டிருக்கிறார். பிரபு திலக் தயாரித்துள்ள வால்டர் படத்தில், சிபிராஜ் ஜோடியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். ரித்விகா, நட்டி நட்ராஜ், சனம் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தத படத்தில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற படங்களின் வேலையால், அவரால் நடிக்க முடியாமல் விலகினார். அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தான், தற்போது நட்டி நட்ராஜ் நடிக்கிறார்.
வால்டர் படத்தின் டீசர், த்ரில்லர் - சஸ்பென்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய ட்ரெண்டிங்கில் முன்னணியில் இருக்கும் இந்த டீசரில், ஆடி பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட, இனிமேல் ஆட்டத்தை பாரு' என பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. சிபி ராஜ் ரசிகர்கள் மத்தியில் வால்டர் டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது.