"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
கடந்த 2019ல், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாகின. இதில் அசுரன் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது. இதைத்தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்திலும் நடித்து வந்தார்.
தற்போது பட்டாஸ் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதன்படி ,பட்டாஸ் ஜனவரி 16ல், திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்திருப்பதாக, நடிகர் தனுஷ் டுவீட் செய்துள்ளார்.
அதில், நான் மிக வேகமாக நடித்து முடித்த படங்களில் ஒன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படம். அவர் போன்ற விவேகமான - தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குநர் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இந்தப் படம் சிறப்பான வெற்றியைப் பெறும். மொத்தத்தில் எல்லாமே, சிறப்பாக அமையும் என பதிவிட்டுள்ளார்.
அதற்கு, பதில் டுவீட் செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதில் அவர் கூறியிருப்பதாவது: தனுஷ், உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி. உங்களைப் போல ஒரு சிறந்த நடிகருடன் பணியாற்றியது, எனக்கும்; எனது குழுவுக்கும் சிறந்த அனுபவம் என பதிவிட்டுள்ளார்.