அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
அஜித்திடம் தான் கற்றுக் கொண்ட பாடம் குறித்து, நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். லால் ஜுனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் டிரைவிங் லைசன்ஸ். நடிகருக்கும் அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே, இந்தப் படம்.
ஒரு பேட்டியில் அஜித் குறித்து ப்ரித்விராஜ் கூறியதாவது: என் வாழ்க்கையில் முக்கியமான பாடத்தைப் படித்தது அஜித்திடம் தான். சில ஆண்டுகளுக்கு முன், என் நண்பர், நடிகர் சூர்யா, புது வீட்டுக்குக் குடித்தனம் போனார். அந்தக் கிரகப்பிரவேசத்துக்கு என்னை அழைத்திருந்தனர். அந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, மாதவன், அஜித் என்று எல்லோரும் வந்திருந்தனர். அந்த விழாவில் அஜித்தும்; நானும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவரோடு பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணிநேரத்தில் அவர் அவரது வெற்றியிலிருந்தும்; தோல்வியிருந்தும் விலகி இருப்பவர் என்பது எனக்குப் புரிந்தது. ஒரு படம், வெற்றி பெற்றால் சந்தோஷம் அடைவதும், தோல்வி அடைந்தால் சோர்ந்து போவதும் இல்லை என்பதை அஜித் என்னிடம் தெரிவித்தார். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன். இதைத்தான் நான் பின் தொடர்கிறேன்.
இவ்வாறு, அவர் கூறியிருக்கிறார்.