விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். இதனை கேரளாவில் பதிவு செய்தால் அதிக வரி கட்ட வேண்டியது இருக்கும் என்பதற்காக புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதற்காக புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்துள்ளார். இதனை கேரள போக்குவரத்து துறை கண்டுபிடித்து சுரேஷ் கோபி மீது வழக்கு தொடர்ந்தது.
தற்போது இந்த வழக்கில் சுரேஷ் கோபி மீது கேரள கிரைம் பிராஞ்ச் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திருவனந்தபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கலான குற்றப்பத்திரிகையில், "2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி புதுச்சேரியில் தனது ஆடி காரை பதிவு செய்த நடிகர் சுரேஷ் கோபி, அதற்கு ஆதாரமாக அளித்த வாடகை ஒப்பந்த ஆவணம் போலியானது" என்று கிரைம் பிராஞ்ச் கூறியுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சுரேஷ் கோபிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.