பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிகர் சிம்பு நடிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படத்தின் படபிடிப்புக்கு சிம்பு வராமல், அவர் தாய்லாந்துக்கு சென்று தங்கி விட்டதால், கோபமடைந்த தயாரிப்பாளர் படத்தையே கைவிடுவதாக அறிவித்தார்.
அதன்பின், உடல் எடையை குறைத்துக் கொண்டு, சென்னைக்குத் திரும்பினார் நடிகர் சிம்பு. இதற்கிடையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடன், தன் மகனுக்காக சமாதானம் பேசினார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர். இதையடுத்து, மீண்டும் மாநாடு படத்தை தயாரிக்க சுரேஷ் காமாட்சி ஒப்புக் கொண்டார்.
படத்தில், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல, நடிகர் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யாரும் ஒத்துவராத சூழலில், நான் ஈ படத்தில் நடித்த சுதீப்பிடம் பேசி முடித்து விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்தப் படத்தில் தான் நடிக்கிறேனா என்பது குறித்து, டுவிட்டரில் சுதீப் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சிம்புவுக்கு வில்லனாக, மாநாடு படத்தில் என்னை நடிக்க வைக்க பேசி முடித்து விட்டனர் என செய்தி பரப்புகின்றனர். அதில், நான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும்; என்னிடம் ஓப்பந்தம் போட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. மாநாடு படத்தில் நான் வில்லனாக நடிக்கவும் இல்லை; அது தொடர்பாக என்னிடம் யாரும் பேசவும் இல்லை என்றார்.