Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்திரமுகி 2: முருகதாஸ், பி.வாசு ஆர்வம்

31 டிச, 2019 - 12:26 IST
எழுத்தின் அளவு:
P.Vasu,-AR.Murugadoss-eager-to-make-Chandramukhi-2

ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடித்த ‛சந்திரமுகி' படம் 800 நாட்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு கன்னடத்தில் இயக்கினார். அதேபோல் தமிழிலும் இயக்கும் யோசனையில் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், "தர்பார் படத்திற்கு முன்னதாக சந்திரமுகி 2ம் பாகத்தை இயக்குவதாக இருந்தேன். வேட்டையன், டாக்டர் என இரு கேரக்டர்களை வைத்து ரஜினியிடம் ஒரு ஐடியா சொன்னேன். அவரும் பிரமாதமாக இருக்கிறது என்றார். ஆனால் படத்தின் இயக்குனர் பி.வாசு 2ம் பாகம் இயக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். படத்தின் உரிமம் சிவாஜி பிலிம்ஸிடம் உள்ளது. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டேன்" என்றார்.

இது தொடர்பாக பி.வாசு கூறியிருப்பதாவது: சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை ஆப்தமித்ரா என்ற தலைப்பில் கன்னடத்தில் இயக்கி விட்டேன். அதை இன்னும் மெருகேற்றி தமிழில் இயக்க இருக்கிறேன். பெரிய நடிகர்களுடன் பேச்சு நடக்கிறது. தயாரிப்பாளரும் முடிவாகி விட்டார். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பப்பில் தாக்குதல்: சஞ்சனா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்பப்பில் தாக்குதல்: சஞ்சனா மீது ... புதுமுகங்களின் தொட்டு விடும் தூரம் புதுமுகங்களின் தொட்டு விடும் தூரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
31 டிச, 2019 - 18:43 Report Abuse
Vasudevan Srinivasan சந்திரமுகி படம் பிகப்பெரிய வெற்றிப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் சில வெற்றிகளை அப்படியே விட்டுவிடவேண்டும் அதுதான் அழகு.. சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு காரணங்கள் திரைக்கதை, இயக்கம், அருமையான இசை ரஜினி என்னும் மாயை எல்லாவற்றுக்கும் மேல் ஜோதிகா அவர்களின் மிரட்டல் நடிப்பு மற்றும் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி இதில் எந்த ஒன்று இல்லை என்றாலும் இரண்டாம் பாகத்தை பார்க்க மனம் வராது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in