Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வால்டர் படத்திலிருந்து கவுதம் மேனன் விலகியது ஏன்?: இயக்குனர் விளக்கம்

31 டிச, 2019 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Valter-:-Why-Gautham-menon-out-in-film

சிபிராஜ் நடித்து வரும் படம் வால்டர். ஷரின் காஞ்சனவாலா ஹீரோயின். ஸ்ருதி திலக் தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் யு.அன்பு இயக்குகிறார். இந்தப் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதிலாக நட்டி நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் அன்பு கூறியதாவது:

படத்தின் முக்கியமான பாத்திரத்திற்கு இயக்குநர் கவுதம் மேனனை அணுகினோம், அவரும் இந்த கதாப்பாத்திரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, நடிக்க ஒப்புக் கொண்டார். அவரது பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் அவரது கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது.

அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாபாத்திரத்திற்கு பரிசீலித்தோம். இறுதியாக நடிகர் நட்டியை அணுகினோம். குவியும் வாய்ப்புகளில் நல்லதை மட்டுமே செய்வேன் எனும் கொள்கையில் அவர் இருந்தார். கதையை முழுதாக கேட்ட பின்பே இப்படத்தில் நடிப்பதை பற்றி பேச முடியும் என்றார். கதை கேட்டதன் முடிவில் படத்தின் மீதும் அவரது பாத்திரம் மீதும் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்து உடனடியாக நடிக்க ஒத்துக்கொண்டார்.

அவரது சம்பந்தமான காட்சிகளை 15 நாட்கள் முன்னதாக தொடங்கி கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம். கேரக்டர் வில்லன் என சொல்ல முடியாது. ஆனாலும் படத்தில் அவர் நேர்மறையானவரா அல்லது எதிரமறையானவரா என இறுதி வரை ரசிகர்கள் குழம்பும்படி, அவரது கதாப்பாத்திரம் இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறும் பாத்திரமாக இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வடிவேலு புதியபடங்களில் நடிப்பார்!வடிவேலு புதியபடங்களில் நடிப்பார்! தமிழ், மலையாளத்தில் வெளிவரும் வன்முறை தமிழ், மலையாளத்தில் வெளிவரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in