பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நாக்க மூக்க, உனக்கென நான் எனக்கென நீ உள்பட காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற பாடல்களை இசை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ரீங்காரமிட்ட பாடல்கள் அவை.
இந்த படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். அந்த படம் சுமாராக ஓடியது.
ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுனைனாவும், நகுலும் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுனைனாவிடம் கேட்டதற்கு, அந்த தகவல் உண்மை தான் என உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.