திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? | விஜய் 67 : 6 வில்லன்களின் அர்ஜுனும் ஒருவர் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதற்கு தன்னை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
ஷாலு ஷம்மு தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், 'மீடு புகார் கூறிய பிறகு தனக்கு நிறைய பட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக' கூறியுள்ளார். மேலும், 'தன்னை சர்ச்சை நாயகியாக பார்ப்பதை கைவிட வேண்டும் என்றும், சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்றும்' அவர் தெரிவித்துள்ளார்.