நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை ரசிகர்களுக்கு சிம்பு எப்போதும் எங்க வீட்டு வேலன் தான். நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், படத்தொகுப்பாளர், நடன இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் சிம்பு.
ஒல்லியாக இருந்த சிம்பு ஒருகட்டத்தில் உடல்பருமனாகி உப்பி போய்விட்டார். தனது நடனத்தால் பலரையும் வியக்க வைத்த சிம்பு, அஅஅ படத்தில் ஒரு அசைவுக்கே மூச்சு வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் கவலைப்பட்டனர். குண்டான காரணத்தால் அவருக்கு படவாய்ப்புகளும் குறையத் தொடங்கியது. தற்போது அவர் வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒஸ்தி படப்பிடிப்பின் போது எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பெரிய வாழை இலையில், பிரியாணி குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே கோழி வறுவலும் இருக்க, அதை ஆறஅமர ஒருகைப்பார்க்கிறார் சிம்பு.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு தான் குண்டு ஆனிற்களா சிம்பு? என கமெண்ட் செய்துள்ளனர். பிறகு ஐந்து பேர் சாப்பாட்டை ஒரே ஆள் சாப்பிட்டா குண்டாகாம என்னாகும் என சிலர் நக்கல் செய்துள்ளனர்.