ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு இருவரும் தங்களுடைய திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கவே திருமணத்தை நிறுத்தியதாக ராஷ்மிகா விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்துள்ள ரக்ஷித் ஷெட்டி, "நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கின்றனர். நான் ராஷ்மிகாவிடம் இருந்து பெரிய பாடத்தை கற்றுக்கொண்டேன். அதுபோல் அவரும் என்னிடம் இருந்து பாடம் கற்றிருப்பார். ராஷ்மிகா இப்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாகிவிட்டார். அவருடன் மீண்டும் இணைவது நடக்குமா எனத் தெரியவில்லை", என தெரிவித்துள்ளார்.