பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிற மொழிகளிலும் நடிக்கிறார் சுதீப். சமீபத்தில் இந்தியில் வெளியான தபாங்-3 படத்தில் 'பல்லி சிங்' என்கிற வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனக்கு சல்மான்கான் வழங்கிய நெகிழவைக்கும் பரிசு ஒன்று குறித்து நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சுதீப்.
அதாவது சல்மான்கான் சுதீப்புக்கு ஒரு லெதர் ஜாக்கெட் ஒன்றை பரிசளித்துள்ளார்.. அதன் பின்புறத்தில் ஒரு நாயின் உருவம் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அது சல்மான்கான் ஆசையாக வளர்த்து வந்த, சமீபத்தில் இறந்துபோன அவரது செல்லபிராணியான நாயின் முகம்தான். இந்தக் லெதர் ஜாக்கெட்டை சுதீப் அணிந்தபடி நிற்க, அதன் பின்புறத்தில் தெரியும் தனது செல்லப்பிராணியின் முகத்திற்கு சல்மான்கான் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுதீ.. மேலும், “சல்மான்கான் எனக்கு அளித்துள்ள இந்த பரிசின் அர்த்தமும் முக்கியத்துவமும் எனக்கு நன்றாகவே தெரிகிறது.. உங்கள் அன்புக்கு நன்றி” என நிகழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.