Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம்: கிளம்பிய எதிர்ப்பு... விழாவை தவிர்த்த ராஜ்நாத் சிங்

28 டிச, 2019 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Why-Rajnath-skip-Vairamuthus-doctorate-function

கவிஞர் வைரமுத்துவிற்கு சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பட்டமளிப்பு விழாவை ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டார்.

விழாவை தவிர்த்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வைரமுத்துவின் பேச்சு பற்றி, ராஜ்நாத்திற்கு, தமிழக பா.ஜ.வினர் தங்களின் கருத்துகளை கடிதம் மூலமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் மீடூ புகாரில் சிக்கிய வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் பாடகி சின்மயி உட்பட பெண்கள் அமைப்பினர். இந்த தகவலும் ராஜ்நாத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய காரணங்களாலேயே பட்டமளிப்பு விழாவை ராஜ்நாத் சிங் தவிர்த்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



ராஜ்நாத்திற்கு நன்றி
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட இருந்த நிகழ்விலிருந்து இராணுவ அமைச்சர் விலகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. நான் சொன்னது போல், தமிழர்களின் உணர்வுகளுக்கும், தொண்டர்களின் வேண்டுதலுக்கும் எப்போதும் பா.ஜ.க மதிப்பளிக்கும். என தமிழக பா.ஜ.வை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (64) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தாண்டு பிரபாஸ் திருமணம்அடுத்தாண்டு பிரபாஸ் திருமணம் தமிழரசன் படப்பிடிப்பு நிறைவு தமிழரசன் படப்பிடிப்பு நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (64)

meenakshisundaram - bangalore,இந்தியா
02 ஜன, 2020 - 04:24 Report Abuse
meenakshisundaram அப்போ இனிமே இவரு 'வசூல் ராஜா'தானா ?போனாப்போவுது ,வங்காளத்தில் எந்த யூனிவர்சிட்டி யாவது கிடைக்கும் மம்தா தயாவுலே அப்போ வாங்கிடலாம் ,மம்தாவுக்கு ஒரு சின்ன அப்ப்ளிகாடின் போடலாம் .
Rate this:
31 டிச, 2019 - 12:24 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கஞ்சா முத்துவுக்கு விருது கொடுத்ததே தப்பு..
Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
30 டிச, 2019 - 15:08 Report Abuse
INDIAN Kumar கருப்பன் ஒரு பெண் குசும்பன்.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
30 டிச, 2019 - 10:08 Report Abuse
ponssasi பல கும்பங்களை சீரழித்ததற்கு தான் டாக்டர் பட்டம். கொடுப்பவன் புத்தனும் அல்ல, வாங்குபவன் காந்தியும் அல்ல, (ராஜ்நாத்சிங்) இந்திய ராணுவ அமைச்சர் விழாவை தவிர்த்தது பாராட்டுக்குரியது. நான் கடந்த பதிவில் போட்டதுபோல் கல்லூரி மாணவர்கள் ஏன் எதிப்பு தெரிவிக்கவில்லை? அனைவரும் சகோதர சகோதிரியுடன் பிறந்தவர்தானே சமூக ஊடககள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்யலாமே? மாணவர்கள் சிந்திக்கட்டும், மீண்டும் எந்த பல்கலை கழகத்திலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
Rate this:
s vinayak - chennai,இந்தியா
30 டிச, 2019 - 08:21 Report Abuse
s vinayak தமிழர்களின் குமுறல்கள் வேதனையாக இருக்கிறது. பட்டம்கொடுப்பது இருக்கட்டும்.சட்டப்படி இவரை தண்டிக்கவே முடியாதா?
Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in