மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
பாப் இசை மற்றும் நடன உலகில் முடிசூடா மன்னனாக இருந்து பல கோடி ரசிகர்களை உலகம் முழுவதும் கவர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். கடந்த 2009ல் இறந்து போனார். ஆனாலும், அவரது இறப்பை இன்று வரையில் அவரது ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இந்நிலையில், அவரைப் போலவே உருவ ஒற்றுமையோடு அர்ஜெண்டினாவின் பார்சிலோனாவைச் சேர்ந்த செர்ஜிஸ் கோர்டெஸ் என்பவர் இருக்க, அவரை, மைக்கேல் ஜாக்சனாக நினைத்து, அவரின் ரசிகர்கள் உருகுகின்றனர். செர்ஜியோ கோர்டெசை மரபணு பரிசோதனை (டிஎன்ஏ) செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டு, தன்னுடைய கருத்தைக் கூறியிருக்கிறார் செர்ஜிஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதலில் மைக்கேல் ஜாக்சனின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு என்னுடைய பணிவான அன்பையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மைக்கேல் ஜாக்சனாக என்னை நினைத்து, என் மேல் பாசத்தை பொழியும் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை. இருந்தாலும், உங்கள் அன்பை என்றும் மறக்க மாட்டேன்.
செர்ஜிஸாக இருந்த நான் எப்படி மைக்கேல் ஜாக்சன் போல மாறினேன் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். எனக்கு பத்திரிகையாளர் ஒருவர் நெருக்கமான நண்பராக இருக்கிறார். அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம், நீங்கள் மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் போலவே நடனமும், இசையும் அத்துபடியாக இருக்கிறது. எனவே, மைக்கேல் ஜாக்சனைப் போல உடையணிந்து, நடனமாடுங்கள் என கேட்டுக் கொண்டார். சில காலங்களுக்குப் பின், கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர் ஒருவரை, என்னுடைய நண்பரான அந்த பத்திரிகையாளர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவரை சந்தித்தப் பின், அவர் எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். அதையடுத்து, எனக்கு வருமானம் குவியத் துவங்கியது. கூடவே, மைக்கேல் ஜாக்சனால் புகழும் குவியத் துவங்கியது. இந்நிலையில், நான் மைக்கேல் ஜாக்சன் அல்ல. செர்ஜிஸ் என்பதையே, மைக்கேல் ஜாக்சன் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். இது ஒரு பக்கம் சந்தோசத்தையும்; இன்னொரு பக்கம் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு செர்ஜிஸ் கூறியிருக்கிறார்.