Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணான கண்ணே பாடல் சாதனை: நெகிழும் இமான்

26 டிச, 2019 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Imman-happy-about-Viswasam-Kannanna-Kannaey-song

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‛விஸ்வாசம்' படம், இந்த ஆண்டின் பொங்கல் ரிலீசாக, கடந்த ஜன., 10ல் ரிலீசானது. நாயகியாக நயன்தாரா நடித்தார். இமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, அப்பா-மகள் உறவுப் பிணைப்பை அழகாக சொல்லும் 'கண்ணானக் கண்ணே' பாடல் மிகவும் பிரபலமடைந்தது. பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்த இப்பாடலுக்கான வரிகளை, கவிஞர் தாமரை எழுதியிருந்தார்.

இந்த பாடலின் வரிகள் அடங்கிய பாடல் யு-டியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இதுகுறித்து இமான் டுவிட்டரில், ‛‛கண்ணான கண்ணே பாடல், நூறு மில்லியன்(10 கோடி) பார்வையாளர்களைக் கடக்க வைத்த ரசிகர்களுக்கு நன்றிகள். இந்தப் பாடல் நிஜமாகவே நிறைய இதயங்களைச் சம்பாதித்து விட்டது. முறிந்து போன பல உறவுகளை மீண்டும் இணைய வைக்க உதவி புரிந்தது என்பதை உங்கள் மெசேஜ்களின் மூலமாக உணர்ந்து கொண்டேன். எனது இசைப் பயணத்தின் சிறந்த தருணமாக, இந்தப் பாடல் அமைந்த இந்தத் தருணத்தை உணர்கிறேன். சாதி, மதம், சமயம், நிறம் அன அனைத்தையும் தாண்டி, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் அளவு,கடந்த அன்பைப் பரிமாறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் மேகா ஆகாஷ் - அறிமுக ஆண்டிலேயே 4 படங்கள்2019ல் மேகா ஆகாஷ் - அறிமுக ஆண்டிலேயே 4 ... தயாரிப்பாளர்களுக்காக திருமணத்தை ரத்து செய்தேன்: ராஷ்மிகா விளக்கம் தயாரிப்பாளர்களுக்காக திருமணத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
31 டிச, 2019 - 13:34 Report Abuse
Murugan அருமையான வரிகளை தந்த தாமரைக்கு மனம்நெகிழ்ந்த பாராட்டுக்கள் …………...
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
28 டிச, 2019 - 17:51 Report Abuse
Vasudevan Srinivasan சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'இளைய தளபதி' விஜய் அவர்கள் நடித்த 'ஜில்லா' படத்தில் இடம்பெற்ற 'எப்போ மாமா மாமா ட்ரீட்டு..' என்ற கர்ணகொடூரமான பாடலை பார்த்தும் கேட்டும் இசையமைப்பாளரான உங்களை மிகவும் கடுமையாக விமர்சித்தேன் ஆனால் அந்த அபத்தத்திற்கு படத்தின் இயக்குனரும் ஒரு பொறுப்பாளி ஒரு கண்ணியமான காவல் துறை அதிகாரி பாடும் பாடலாக அமைக்கப்பட்டிருக்கும் பாடல் இப்படி இருக்கலாமா நான் ஒன்றும் நடிகர்திலகத்தின் தங்கப்பதக்கம் போல இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை ஓரளாவது ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு மரியாதை தரும் பாடல் காட்சியாக இருக்க வேண்டாமா... ஆனால் 'தல' அஜித் அவர்கள் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்.. நாயகராக நடிக்கும் நடிகரின் இமேஜுக்காகவோ அல்லது இயக்குநரின் கட்டாயத்துக்காகவோ பொருத்தமில்லாத பாடல்களை ஒத்துக்கொள்ளாதீர்கள் அது உங்கள் மீதுள்ள மரியாதையை கெடுத்துவிடலாம்..
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28 டிச, 2019 - 01:39 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அருமையான மெட்டு. பாடல் வரிகள். "ஆராரிராரோ" மட்டும் இல்லையென்றால் அதை ஒரு மெலடி காதல் பாட்டாகவும் வைத்து கொள்ளலாம். அந்த நெருடல் மட்டும் தான். Otherwise, it is a very beautiful song. Good combination of voice, words, tune and music.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
27 டிச, 2019 - 01:10 Report Abuse
jayanantham உண்மையில் மிகவும் அருமையான பாடல்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in