மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற புதுமு நடிகைகள் அறிமுகமாகிறார்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலர் தான் முன்னணி நடிகைகளாக வளருகிறார்கள். கடும் கிளாமர் போட்டிகளுக்கு இடையில் அவர்கள் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
இந்த ஆண்டில் நிறைய இளம் நடிகைகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு மேகா ஆகாஷுக்குக் கிடைத்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு இன்னும் வெளிவராத ஒரு பக்கக் கதை படத்தில் தான் அவர் முதலில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம்தான் அவருடைய முதல் படமாக இந்த ஆண்டு வெளிவந்தது. முதல் படத்திலேயே ரஜினிகாந்துடன் நடித்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
பேட்ட படம் தவிர மற்ற படங்கள் சரியாகப் போகவில்லை என்றாலும் இந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில் மேலும் வளருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளவர்களில் மேகா ஆகாஷ் முக்கியமானவர்.