175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
அழகும், திறமையும் இருந்தால் மட்டும் போதாது சினிமாவில் ஜெயிக்க அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் பிந்து மாதவி. சமீபகாலமாக அவர் நடிப்பில வெளியான எந்தப் படமும் அவருக்கு பலன் தரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு சென்றவர். அப்படியே அங்கு சீரியலில் செட்டிலாகிவிட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் மாயன் என்ற திகில் பேண்டஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாயன். ராஜேஷ் கண்ணா தயாரித்து, இயக்கியுள்ளார் .
மலேஷிய நடிகர் வினோத் மோகன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பிந்துமாதவியும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஜான் விஜய் ஆடுகளம் நரேன், தெறி தீனா , ராஜ சிம்மன் , கஞ்சா கருப்பு , ஸ்ரீ ரஞ்ஜினி ஆகியோரும் நடித்துள்ளனர். மாயன் மாதவிக்கு உதவுவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.