குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை ரெஜிஷா விஜயன். சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர். முதல் படமான அனுராக கார்க்கின் வெல்லம் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கா கேரள அரசின் விருதை பெற்றார். கடந்த ஆண்டு மட்டும் 3 படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதில் இவர்களுடன் நட்டி, லால் ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். திருநெல்வேலி பகுதியில் படமாகிறது.