20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகியாக நடிக்கும் ரேகா | யோகிபாபுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த தோனி | தமிழில் வெளியாகும் 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | அதிக சம்பளம் என்றால் வில்லனாக நடிப்பாரா கமல்ஹாசன்? | ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் |
கேரள மாநிலம் பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் பிறந்தவர், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் செம்மை வைத்தியநாத பாகதவர். 3 வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8வது வயதில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். சினிமா பின்னணி பாடகர் யேசுதாசின் குருநாதர்.
தற்போது வரலாற்று படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வரிசையில் வித்வான் செம்பை வைத்தியநாத பாகவதரின் வாழ்க்கை கதையும் படமாக தயாராகிறது. இதில் செம்பை வைத்தியநாத பாகவதர் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
இசையமைப்பாளரும் இயக்குனருமான விஜித் நம்பியார் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே முந்திரி மேன்சன் என்ற படத்தை இயக்கி உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட முழு விபரங்கள் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது.