Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

4வது முறையாக விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணி ?

25 டிச, 2019 - 12:37 IST
எழுத்தின் அளவு:
vijay-to-join-hands-with-a.r.murugadoss-for-4th-time

தமிழ்த் திரையுலகின் வசூல் நடிகர்களில் நம்பர் 1 இடத்தை இந்த ஆண்டு பிடித்துள்ளவர் விஜய் தான் என சமீபத்திய பல 2019 டாப் 10 தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யுடன் எந்த இயக்குனர் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதைப் பொறுத்து அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிறது.


விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது பற்றி இப்போதே தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. வெற்றிமாறன், மோகன்ராஜா உள்ளிட்ட சில இயக்குனர்கள் விஜய்யிடம் கதை சொன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால், மீண்டும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாய்ப்புகள்தான் அதிகம் என்கிறார்கள்.


ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. விஜய் நடித்து வரும் படம் பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். அதன்பின் இருவரும் மீண்டும் இணையும் படம் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக விஜய், முருகதாஸ் இணைந்தால் அந்தப் படத்தின் வியாபாரமும் மிக அதிகமாக இருக்கும் என்பது உண்மை.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் ஆகும் சமந்தா ?தயாரிப்பாளர் ஆகும் சமந்தா ? 'கெட்ட' வார்த்தை வீடியோவை வெளியிட்ட த்ருவ் விக்ரம் 'கெட்ட' வார்த்தை வீடியோவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
26 டிச, 2019 - 10:04 Report Abuse
shoba 4th Flop
Rate this:
natarajan s - chennai,இந்தியா
26 டிச, 2019 - 06:48 Report Abuse
natarajan s வழக்கம் போல் வெளிநாட்டு உள்நாட்டு கதை திருட்டு இவரது சினிமா எடுக்கப்படும் , அதர்க்கு ஒரு பஞ்சாயத்து, இதர்க்கு முட்டு கொடுக்க ஒரு கூட்டம், இவரது படத்தை முதல் நாளில் பார்ப்பதுதான் ஜென்ம சாபல்யம் என்று கூறும் ஒரு கூட்டம், இதெல்லாம் ஒரு செய்தி . கதையை திருடும் கூட்டத்தினருக்கு நாட்டில் முக்கியத்துவம் .
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
26 டிச, 2019 - 10:32Report Abuse
Vijayநீ ஒரு ரெண்டு வரி கதை இங்க சொல்லு .. அந்த ரெண்டு வரி கதை இதற்க்கு முன்னாடி யாரும் கேள்விபற்றிக்கூடாது ... சொல்லமுடியலைனா கால் அணி வரும் ......
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26 டிச, 2019 - 04:29 Report Abuse
 nicolethomson முருகதாஸ் இல்லையென்றால் விஜய்க்கு மறுவாழ்வு இருந்திருக்கவே இருந்திருக்காது கிங் மேக்கர் முருகதாஸ் என்று வேண்டுமானால் சொல்லலாம்
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
26 டிச, 2019 - 10:28Report Abuse
Vijayஇப்போ கிங் மேக்கர் என்று சொல்லுவ , அப்புறம் தல தான் முருகதாஸுக்கு மறுவாழ்வு இல்லை வாழ்கை குடுத்தாருன்னு சொல்லுவ .. அதான ???...
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
25 டிச, 2019 - 19:40 Report Abuse
Vasudevan Srinivasan வெற்றி தொடர வாழ்த்துக்கள்..
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25 டிச, 2019 - 17:14 Report Abuse
Loganathaiyyan இவனுங்க சேர்ந்தா என்ன சேராட்டி என்ன?? சாதாரண மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனமில்லை???ஒரு ரூ. 500 கோடியில் படம் எடுப்பார்களா??அதில் ஜோசப் விஜய்க்கு ஒரு 100 கோடி கொடுப்பார்களா???எல்லா ரசிகர் பட்டலாத்தையும் அந்த சினிமாவை பார்க்க வைத்து அவனிடமிருந்து பணம் வாங்கி அதை ரூ ௬௦௦ கோடி பண்ணுவார்களா???சினிமா போன்ற ஒரு மாய தொழில் சின்ஹா உலகில் இல்லவே இல்லை. இதே ரூ ௫௦௦ கோடிக்கு ஒரு தொழிற்சாலை அமைத்து பல தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து நாள் பொருளாக உற்பத்தி செய்து நாட்டுக்கு கொடுத்தார்கள் என்றால் பரவாயில்லை. மாய லோகத்தை சிருஷ்டித்து பணம் பண்ணும் இந்த தொழிலெல்லாம் ஒரு தொழிலே அல்ல. வெறும் பணம் விரயம் இந்த தோல் காமி பண்ணு தொழில் செய்பவர்களுக்குத்தான் இதனால் வருமானம்.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
26 டிச, 2019 - 10:25Report Abuse
Vijayஉன்னால கூட மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லை .. என்ன பண்ணலாம் உன்ன .....
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in