"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து, நடிகர் ரஜினியை நேரில் சந்தித்தார். ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து, இயக்குநர் சிவா இயக்கத்தில், தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்படிப்பு நடக்கிறது.
இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ரஜினி சந்தித்துள்ளார் பிரபல பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தனது சமூகவலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸஸ் நகரில், சமீபத்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் மகளிர் பிரிவில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து. நடிகர் ரஜினியை அவர் சந்தித்தப்போது, தான் பட்டம் வென்றது குறித்து, நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் பி.வி.சிந்து.