Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நஷ்டஈடு, ஸ்டிரைக்: தியேட்டர்கள் உரிமையாளர் திடீர் தீர்மானம்

24 டிச, 2019 - 15:55 IST
எழுத்தின் அளவு:
TN-Theatre-Owners-new-resolution

கோவை, சின்னியம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட தியேட்டர் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் காராசாரமான விவாதம் நடைபெற்றது.

தியேட்டர் அதிபர்கள் சந்தித்து வரும் நஷ்டங்கள், அதிலிருந்து எப்படி மீள்வது, தமிழக அரசிடம் வைக்க கூடிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தின் இறுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு...

1. இனி வரும் காலங்களில் உச்ச நடிகர்களின் படங்கள் தோல்வியை தழுவினால் அதற்கு அவர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்களை திரையிட கூடாது.

2. தியேட்டரில் படங்கள் வெளியான 100 நாட்கள் கழித்தே அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் படத்தை வெளியிட வேண்டும்.

3. 8 சதவீதம் வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும். இல்லாவிட்டால் மார்ச் முதல் தியேட்டர் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த திடீர் தீர்மானம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இருவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்திமீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி வைரலான அஜித் மகள் அனோஷ்காவின் வீடியோ வைரலான அஜித் மகள் அனோஷ்காவின் வீடியோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

dinesh - pune,இந்தியா
25 டிச, 2019 - 20:39 Report Abuse
dinesh இதுக்கு பதிலா படம் தியேட்டர்ல ஓடி முடிந்து வரும் லாப நஷ்டத்தை தயாரிப்பாளர் முதல் தியேட்டர் முதலாளி வரை பங்கு போட்டுக்கலாமே. ( உங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை இருந்தால்)
Rate this:
Girija - Chennai,இந்தியா
25 டிச, 2019 - 19:36 Report Abuse
Girija கல்யாண சத்திரம் போல் தியேட்டர்களை வாடகைக்கு விட்டால் என்ன?
Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
25 டிச, 2019 - 19:31 Report Abuse
M.Guna Sekaran .முதலில் அதிக பணம் கொண்டு எந்த படத்தையும் வாங்கி திரை எடாதீர் . அதுவே லாபம் தான் .டிக்கெட் விலையை குறையுங்கள் .
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25 டிச, 2019 - 17:43 Report Abuse
Loganathaiyyan ஏன்டா தோல் காமி பணம் பண்ணு தொழில் நடிக நடிகையர்களுக்கு நீங்கள் ரூ 1 கோடி முதல் ரூ 132 கோடி வரை கொடுப்பீர்கள் அதனால் என்ன பிறயோஜனம் சாதாரண மக்களுக்கு??நீ எல்லாம் கண்டிஷன் போடுவியாம்???எல்லாரும் சினிமாவை பார்ப்பதை நிப்பாட்டினால் இது தானா அடங்கும்???
Rate this:
thiru - Chennai,இந்தியா
25 டிச, 2019 - 14:41 Report Abuse
thiru ஏன்டா முதல்ல தின்பண்டத்திற்கும் வாகன வாடகையும் அநியாயமா வசூல் பண்றதை முதல்ல நிறுத்துங்கடா இல்லைன்னா.. நீங்க பேசாம திரையரங்குகளை மூடிடுங்க.. மக்கள் சந்தோசமா நிம்மதியா இருப்பாங்க...
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in