Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

96 - விருதுகளைக் குவித்த த்ரிஷா

24 டிச, 2019 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Trisha-bags-more-awards-for-96

2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து 17 வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

2017ம் ஆண்டில் ஒரு தமிழ்ப் படத்தில் கூட நடிக்காதவருக்கு 2018ல் வெளிவந்த '96' படம் அவரது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் நடித்த 'ஜானு' கதாபாத்திரத்தை ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள்.

அதன் காரணமாகவோ என்னவோ, அந்தப் படம் த்ரிஷாவுக்கு இதுவரையிலும் 11 விருதுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாம். அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து? “எனது ஆசீர்வாதங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன், 96 படத்திற்காக 11, 'ஹே ஜுட்' படத்திற்காக 3, உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். த்ரிஷா மலையாளத்தில் முதல் முறையாக நடித்த 'ஹே ஜுட்' படமும் கடந்த வருடம் வெளிவந்தது.

இந்த வருடம் த்ரிஷா நடித்து 'பேட்ட' படம் மட்டுமே வெளிவந்தது. அதில் முதல் முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்ததால் அவருக்கு இந்த வருடமும் மறக்க முடியாத ஆண்டு தான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'முத்தம் என்பது அன்பு!''முத்தம் என்பது அன்பு!' 2019 - இளம் நடிகைகளையே ஆச்சர்யப்பட வைத்த ஜோதிகா 2019 - இளம் நடிகைகளையே ஆச்சர்யப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in