Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னத்தை விட ஷங்கரை பிடிக்கும்: கேஜிஎப் ஹீரோ யஷ்

23 டிச, 2019 - 17:54 IST
எழுத்தின் அளவு:
Yash-likes-Director-Shankar-more-than-Maniratnam

பொதுவாகவே தமிழ் ஹீரோக்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி நடிகர்கள், ஏன் இந்தி நடிகர்களுக்கு கூட மணிரத்னம் மற்றும் ஷங்கர் இருவரது டைரக்ஷனில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை கண்டிப்பாக இருக்கும். அந்த அளவிற்கு இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களான இந்த இருவர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு ஒரே நேரத்தில் கிடைத்தால் யார் படத்தில் நடிப்பீர்கள் என 'கேஜிஎப்' பட ஹீரோ யஷ்ஷிடம் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கேள்வி கேட்கப்பட்டது.

ஆனால், அவரோ கொஞ்சமும் யோசிக்காமல் ஷங்கரின் படத்தில் தான் பணிபுரிய விருப்பம் என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, “மணிரத்னம் மிகச்சிறந்த படங்களை கொடுத்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அவரது படத்திலும் பணிபுரிய ஆசை தான்.. ஆனால் ஷங்கரின் படங்கள் பிரமாண்டமானவை.. அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு தான் எனக்கு விருப்பம்.. அந்த அடிப்படையில்தான் இந்த பதிலைக் கூறினேன்” என்ற விளக்கமும் அளித்துள்ளார் யஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸுடன் இணையும் 'அர்ஜுன் ரெட்டி' இயக்குனர்பிரபாஸுடன் இணையும் 'அர்ஜுன் ... சமந்தாவிடம் காதல் கதை சொல்லும் அகில் சமந்தாவிடம் காதல் கதை சொல்லும் அகில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in