அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
'பாகுபலி' படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ் இந்திய நடிகராக உயர்ந்தார். அதன் பின் அவர் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த பிரம்மாண்டமான படமான 'சாஹோ' ஹிந்தியில் மட்டுமே சிறப்பாக ஓடி 100 கோடி வசூலைக் கடந்தது.
'சாஹோ' படத்திற்குப் பின் பிரபாஸ் நடிக்க உள்ள படம் 'ஜான்'. இந்தப் படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. சரித்திர கால காதல் கதையாக இப்படம் உருவாக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி', ஹிந்தியில் அதன் ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தை இயக்கிய சந்தீப் வங்கா, பிரபாஸ் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
'கபீர் சிங்' படம் 300 கோடி வரை வசூலானது. பிரபாஸுக்கும் ஹிந்தியில் தற்போது நல்ல மார்க்கெட் உள்ளதால் இருவரும் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் இந்தக் கூட்டணி இணைய உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.