தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
சமீபத்தில் வெளியான படங்கள் ‛இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', மற்றும் ‛காளிதாஸ்'. முதல் படம் உலகத்தின் ஆயுதபோர் அபாயம் பற்றி பேசியது. காளிதாஸ் படம் நல்ல திரைக்கதையுடன் அமைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்த இரண்டு படங்களுக்கும் மீடியாக்கள், மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெளிவந்த புதிய படங்களால் பெரும்பாலான தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்டு விட்டது. இதானல் நல்ல பெயர் கிடைத்தும் இரண்டு படத் தயாரிப்பாளர்களுக்கும் வசூல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இந்த படங்களுக்கு வழிவிட்டு அவற்றை மீண்டும் திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் டி.சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள். சமீபத்தில் வெளியான குண்டு. காளிதாஸ் போன்ற தரமான திரைப்படங்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இருந்தும், தொடர்ந்து வாரா வாரம் வெளியாகும் திரைப்படங்களால் கதையம்சம் கொண்ட தரமான திரைப்படங்கள் ஓட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மேற்படி குண்டு, காளிதாஸ் ஆகிய 2 திரைப்படங்களையும் முடிந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் மீண்டும் திரையிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.